பூமியில் இருந்து வானத்திற்கு செல்ல படிகட்டுகள்..... வைரலாகும் வீடியோ.....
அமெரிக்காவில் பூமியில் இருந்து வானத்திற்கு செல்லும் வகையில் வெடிக்கப்பட்ட பட்டாசு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 1957ல் சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சோ நகரில் கலைஞர் காய் குவோ-கியாங் பிறந்தார். இவர் பட்டாசு தயாரிப்பவரான காய் குவோ, தற்போது அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வசித்து வருகிறார். விதவிதமாக பட்டாசுகளை தயாரிப்பதை சிறுவயதில் இருந்தே ஆர்வம் கொண்டிருந்தார். இந்த நிலையில் இவர் தயாரித்த 1,650 அடி உயரம் கொண்ட பட்டாசு ஒன்று தற்போது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
பூமியில் இருந்து வானத்திற்கு செல்ல படிகட்டுகள் இருப்பது போன்று கற்பனை செய்து பார்க்க முடியாத வண்ணத்தில், தனது படைப்பாற்றலால், கலைஞர் காய் வான உயரத்திற்கு பட்டாசு தயாரித்துள்ளார். அதனை "ஸ்டெர்வே டு ஹெவன்" என்று அழைக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சீன கலைஞர் காய்யை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கடந்த 1994 இல் முதல் முயற்சியை மேற்கொண்ட இவர், பலத்த காற்று வீசியதால் அவரின் முயற்சி தோல்வியடைந்தது. தொடர்ந்து, 2001 இல் மீண்டும் முயற்சித்தபோது, ஷாங்காய் அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தனர். இந்த நிலையில், தனது பாட்டிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தற்போது "ஸ்டெர்வே டு ஹெவன்" என்ற பட்டாசை தயாரித்துள்ளார். அது ஏணி போல் அழகாக இருப்பதால் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சீன கலைஞரின் பட்டாசு இந்தியாவிலும் கூடிய விரைவில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.