'கொதித்துக் கொண்டே இருக்கும் குளங்கள்!!' எங்க இருக்கு தெரியுமா?
உலகில் பல வெப்பமான இடங்கள் இடங்கள் உள்ளன.. ஆனால் இந்த இடத்தில் சில சமயங்களில் 145 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இந்த இடம் எத்தியோப்பியாவின் டானகில் பாலைவனமாகும். இங்கு ஆண்டு முழுவதும் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். கடுமையான வெப்பம் காரணமாக, எத்தியோப்பியாவில் உள்ள இந்த இடம் பூமியின் கொடூரமான இடம் என்றும் அழைக்கப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் இங்குள்ள குளங்களில் தண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கிறது.
இது பூமியில் மிகவும் வித்தியாசமான இடங்களில் ஒன்றாக அழைக்கப்படுகிறது – “நரகத்திற்கான நுழைவாயில்” என்றும் கூறப்படுகிறது.. டானகில் பாலைவனத்தின் கந்தகமான வெந்நீரூற்றுகள், அமிலக் குளங்கள், நீராவி பிளவுகள் மற்றும் உப்பு மலைகள் ஆகியவை எத்தியோப்பியாவின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். எவ்வளவு வெப்பமாக இருந்தாலும், இங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்..
கந்தக நீரூற்றுகள் பாறை நிலப்பரப்பில் இருந்து வெளியேறும் நியான் பச்சை மற்றும் மஞ்சள் நிறக்களாக காணப்படுகிறது.. இது எத்தியோப்பியாவின் தொலைதூர வடகிழக்கு பகுதியில் உள்ள புவியியல் தாழ்வு ஆகும், அங்கு மூன்று டெக்டோனிக் தட்டுகள் மெதுவாக வேறுபடுகின்றன. இப்பகுதி ஒரு காலத்தில் செங்கடலின் ஒரு பகுதியாக இருந்தது. காலப்போக்கில், எரிமலை வெடிப்புகள் போதுமான லாவாவை உமிழ்ந்து கடல்நீர் வறண்டு, பாலைவனமாக மாறியதாக கூறப்படுகிறது.
Read more ; இனி X -இல் நீங்கள் போடும் லைக்ஸ் மற்றவர்களுக்கு தெரியாது!