For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் கருப்பு இருள்..! மக்களுக்கு ஹை அலெர்ட் கொடுத்த வானிலை மையம்..!

Black darkness moving at a speed of 10 km per hour..! The Meteorological Center has given high alert to the people..!
05:19 AM Oct 16, 2024 IST | Kathir
மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் கருப்பு இருள்    மக்களுக்கு ஹை அலெர்ட் கொடுத்த வானிலை மையம்
Advertisement

தெற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி அதிகாலையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை கடந்து நெல்லூர் - புதுச்சேரி இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கும் ena தெரிவிப்பட்டுள்ளது.

Advertisement

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் சமயத்தில் தரை காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35கிமீ முதல் 55கிமீ வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 440 கிமீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 460 கிமீ. கிழக்கு தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. கடந்த 6மணி நேரத்தில் மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று மற்றும் இன்றைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக, மீனவர்கள் மீன்பிடிக்க 17ம் தேதி வரையில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, மற்றும் புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 4 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Read More: உஷார் மக்களே.. தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா..!! ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?

Tags :
Advertisement