முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜக படுமோசமான தோல்வி!! - ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சிக்கிம் மோர்ச்சா!!

05:00 AM Jun 03, 2024 IST | Baskar
Advertisement

சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 31 இடங்களில் வெற்றிபெற்று, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைத்துள்ளது.

Advertisement

2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள், மக்களவை தேர்தலுடன் ஜூன் 4ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் காலை 6 மணிமுதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியுள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. அதனுடன் ஆட்சியையும் தக்க வைத்துள்ளது.

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக 5.18% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 58.38 சதவீத வாக்குகளையும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 27.37 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.சிக்கிம் மாநில பாஜக தலைவர் டில்லி ராம் தாபா, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் கலா ராய்யிடம் 2,968 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். வடக்கு பர்டக் தொகுதியில் கடந்தமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த தாபா, 3,755 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ராய் 6,723 வாக்குகளைப் பெற்றார்.சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த டி.பி. தாபா 1,623 வாக்குகளைப் பெற்றார். சிட்டிசன் ஆக்‌ஷன் கட்சியின் வேட்பாளர் பி.கே. தமாங் 581 வாக்குகளைப் பெற்றார்.சிக்கிம் மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளில் லாச்சென் மங்கன் தவிர்த்து 31 இடங்களில் பாஜக களம் கண்டது.ஆனால், பாஜக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், பாஜகவிற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். மேலும் பாஜகவினரின் தேர்தல் பணிகளை பாராட்டிய அவர், சிக்கிம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாஜக நிச்சயம் துணை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Read More: Arvind Kejriwal: அனுமன் கோவில் சாமி தரிசனத்திற்கு பிறகு திகார் சிறையில் சரணடைந்தார் கெஜ்ரிவால்..!

Tags :
சட்டப்பேரவைத் தேர்தல்சிக்கிம்தோல்விபாஜகமோர்ச்சா
Advertisement
Next Article