For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Lok Sabha 2024 | தமிழக பாஜக-வில் கோஷ்டி மோதல்.!! ராதிகா சரத்குமாருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல்.!!

03:37 PM Mar 27, 2024 IST | Mohisha
lok sabha 2024   தமிழக பாஜக வில் கோஷ்டி மோதல்    ராதிகா சரத்குமாருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல்
Advertisement

2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பொது தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலை எதிர்கொள்கின்றன. இவற்றைத் தவிர நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மேலும் சில தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிவை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி தங்களது தலைமையில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை அமைத்தது.

இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் இணைந்துள்ளது. நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்ததாக அறிவித்த அவர் தனது மனைவி ராதிகாவுடன் பாஜகவில் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து சரத்குமார் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் அவருக்கு பதிலாக அவரது மனைவி ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பாஜக வழங்கி இருக்கிறது .

தற்போது இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வேதா என்பவர் ராதிகாவிற்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .

மீட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று டெல்லி மோடி பாஜக அணி என்ற பெயரில் விருதுநகர் பாஜக நிர்வாகி வேதா என்பவர் சுயேட்ச்சையாக அமைப்பு மனோத்தாக்கல் செய்திருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேப்பம் மனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பாஜக கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலை வெளிப்படையாக காட்டுவதாக அமைந்திருக்கிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More: Ram Temple | அயோத்தி ராமர் கோயிலில் துப் பாக்கிச்சூடு..!! ஒருவர் கவலைக்கிடம்..!! பெரும் பரபரப்பு..!!

Advertisement