முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3 மாதம் அரசியலில் இருந்து ப்ரேக்.. இங்கிலாந்து செல்கிறேன்..!! ஸ்டாலின் ஸ்டைலில் சொன்ன அண்ணாமலை..!!

BJP state president Annamalai is leaving London today to study international politics at Oxford University in London.
03:33 PM Aug 27, 2024 IST | Mari Thangam
Advertisement

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக இன்று லண்டன் புறப்படுகிறார்.

Advertisement

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதனால் 3 மாதங்கள் அரசியலில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன. அதனை இன்று அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் லண்டன் செல்லும் அண்ணாமலை, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி முதல், தொடந்து 13 வாரங்கள், சர்வதேச அரசியல் கல்வி தொடர்பான படிப்பை பயில உள்ளார்.  13 வாரங்கள் கழித்து அக்டோபர் இறுதியில் மீண்டும் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கபடுகிறது.  பாஜக மாநில தலைமை பொறுப்புகளை அண்ணாமலை லண்டனில் இருந்தபடியே கட்சியின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் எனவும், வாரத்துக்கு ஒருமுறை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக கட்சி செயல்பாட்டுகளை கவனித்து வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, “லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இன்று இரவு இங்கிலாந்து செல்கிறேன். நான் வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றாலும், என் இதயம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். ‘

நான் வெளிநாடு சென்றாலும், ஆளுங்கட்சியின் தவறை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிடுவேன். இந்த அரசியல் சண்டை தொடரும். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிராமங்களை நோக்கி நங்கள் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பாஜக தரும் அலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து, உறுப்பினராக இணையலாம்.” என்று தனது வெளிநாட்டு பயணம் பற்றியும் அதன் பிறகான பாஜக செயல்பாடு குறித்தும் அண்ணாமலை பேசினார் .

Read more ; தேர்தல் ஆணையத்தில் விஜய் மீது பரபரப்பு புகார்..!! நடவடிக்கை பாய்கிறதா..?

Tags :
BJPBJP Annamalaicm stalinlondonOxford University in London
Advertisement
Next Article