மல்யுத்த வீரர்கள் காங்கிரஸின் சிப்பாய்கள்.. அந்த போராட்டம் அவர்களின் கூட்டு சதி..!! - பிரிஜ் பூஷண் விமர்சனம்
பிரிஜ் பூஷணுக்கு எதிரான, கடந்தாண்டு தொடங்கப்பட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரா் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்தனா். இந்த நிலையில், இருவரும் காங்கிரஸில் இணைந்தது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான் என்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பெண்களை அவமதிக்கும் குற்றத்தை நான் செய்யவில்லை. பெண்களை அவமதிக்கும் குற்றத்தை யாராவது செய்திருந்தால் அது பஜ்ரங்கும், வினேஷும் தான். மேலும் அதற்கு திரைக்கதை எழுதிய பூபேந்திர ஹூடாவும் பொறுப்பேற்க வேண்டும். கட்சி கேட்டுக்கொண்டால் ஹரியாணா தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன். ஹரியாணாவில் எந்த ஒரு பாஜக வேட்பாளரும் வினேஷ் போகத்தை எளிதில் தோற்கடிப்பார்” என்றார்.
முன்னதாக மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து ஹரியாணாவின் ஜூலானா தொகுதியில் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகத்தை கட்சி அறிவித்தது. பஜ்ரங் அகில இந்திய கிஷான் காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் பிரிஜ் பூஷணின் இந்தக் கருத்து வந்துள்ளது.
மல்யுத்த வீரர்களுக்கு நீதி கோரும் போர்வையில், பல காங்கிரஸ் தலைவர்கள் போராட்டங்களில் சேர்ந்தனர். மல்யுத்த வீரர்களை அவர்களின் சிப்பாய்களாக மாற்றி விட்டனர். உண்மையில், இது விளையாட்டு வீரர்களின் போராட்டம் அல்ல. இந்த நாடகத்தில் காங்கிரஸ் ஈடுபட்டிருப்பது, சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெளிவாகியுள்ளது.
மல்யுத்த வீரர்களுடன் சேர்ந்த காங்கிரஸ், இந்த நாட்டில் மல்யுத்தத்திற்கான மதிப்பை குறைபடுத்தி விட்டது'' என்று கூறியிருந்தார். காங்கிரஸில் இணைந்த சில மணி நேரத்திலேயே, வருகிற அக்டோபரில் நடைபெறும் ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜுலானா தொகுதியின் வேட்பாளராக போகத் அறிவிக்கப்பட்டார். பஜ்ரங் புனியாவுக்கு இந்திய விவசாய காங்கிரஸின் செயல் தலைவா் பதவி அளிக்கப்பட்டது. இதனிடையே, மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் சதி என்று பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.