தப்லீக் ஜமாத் நிதி ஒதுக்கீடு.! காங்கிரசுக்கு கண்டனத்தை பதிவு செய்த பாஜக எம்எல்ஏ.! வெடித்த சர்ச்சை.!
ஜனவரி மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தெலுங்கானா அரசு 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறது. இது தொடர்பாக பிஜேபி எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் கூறியகருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தின் விகாராபாத் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் தப்லீக் ஜமாத் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு தெலுங்கானா சிறுபான்மை நலத்துறை 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. இதற்கு தெலுங்கானா பிஜேபி எம்எல்ஏ ராஜா சிங் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பிற்கு தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசு நிதியை ஒதுக்கி இருப்பது கண்டனத்திற்குரியது என பதிவிட்டு இருக்கிறார். மேலும் இது போன்ற நடவடிக்கைகளின் மூலம் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இவரது கருத்துக்கள் விஷத்தை பரப்புவதாக பலரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.