முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திமுக அரசுக்கு டாஸ்மாக் வாழனும், மக்கள் உயிர் பற்றி கவலை இல்லை."! தர்மபுரி கொலை குறித்து பாஜக அண்ணாமலை விமர்சனம்.!

05:11 PM Jan 04, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தர்மபுரியில் ஏற்பட்ட மோதலில் விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் கொலை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கொடூர சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சனம் செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement

இது தொடர்பாக தனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபெறும் கட்டுப்பாடற்ற மது விற்பனையால்தான் கொலை குற்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன என பதிவு செய்துள்ளார். மேலும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களிலும் வீடுகளுக்கு முன்பு மது அருந்தும் பழக்கம் தொடர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பல்லடத்தில் மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது தனது நிலத்தில் மது அருந்திய நபர்களை தட்டி கேட்ட விவசாயியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது போன்ற அராஜகங்களில் ஈடுபடுபவர்களின் மீது ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். திமுக அரசின் நடவடிக்கைகளை பார்க்கும் போது மது ஆலைகளின் மூலம் வருமானம் வந்தால் போதும் என்ற நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். பொது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

Tags :
BJPDharmapuri MurderDmktasmactn politics
Advertisement
Next Article