"ரூ.6,564/- கோடியை திருப்பி செலுத்துமா பாஜக.?" உச்ச நீதிமன்றம் வைத்த செக்..!!
2017-18 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் ஒரு சில மாற்றங்களுடன் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது தொடர்பாக தீர்ப்பை அறிவித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி தடை செய்தனர்.
எந்த அரசியல் கட்சிகளுக்கு யார் நிதி கொடுக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் தெரிந்திருப்பது அவசியம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தேர்தல் பத்திரங்களின் வெளிப்படை தன்மை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இது பொது மக்களின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்தல் பத்திரங்களின் மூலம் பெறப்பட்ட நிதியை நன்கொடையாக வழங்கியவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை பெறப்பட்ட நிதியை நன்கொடையாக கொடுத்தவர்களுக்கே திருப்பிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்களின் மூலம் ரூ.6,564 /- கோடியை பாரதிய ஜனதா கட்சி நன்கொடையாக பெற்று இருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் ரூ.210 /- கோடியும் 2019 ஆம் ஆண்டில் ரூ.1,450 /- கோடி 2020 ஆம் ஆண்டில் ரூ.2,555 /-. கோடி 2021 ஆம் ஆண்டில் ரூ.22.38/-. கோடி 2022 ஆம் ஆண்டில் ரூ.1,033 /-. கொடி மற்றும் 2023 ஆம் ஆண்டில் ரூ.1,294 கோடி என ரூ.6,564 /- கோடி ரூபாய் தேர்தல் நன் கொடையாக தேர்தல் பத்திரங்களின் மூலம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் பத்திரத்தை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம் அதன் மூலம் பெறப்பட்டுள்ள நிதியை நன்கொடை வழங்கியவர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது . இதனால் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நிதியாக பெறப்பட்ட தொகையை திருப்பி வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.