For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரச்சாரம் செய்யும்போது பெண்ணை இழுத்து வைத்து முத்தம் கொடுத்த BJP வேட்பாளர்..!! பெரும் பரபரப்பு..!!

04:51 PM Apr 10, 2024 IST | Chella
பிரச்சாரம் செய்யும்போது பெண்ணை இழுத்து வைத்து முத்தம் கொடுத்த bjp வேட்பாளர்     பெரும் பரபரப்பு
Advertisement

மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் பெண் ஒருவருக்கு பாஜக வேட்பாளர் முத்தம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு சிட்டிங் எம்.பியாக இருக்கும் ககென் முர்மு பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரச்சாரம் செய்ய சென்ற இடத்தில் அங்கிருந்த பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோக்களையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பரப்பி பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக ககென் முர்மு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, "அந்த பெண் என்னுடைய உறவினர் என்றும், அவர் எனக்கு குழந்தை மாதிரி எனவும் கூறியுள்ளார். மேலும், குழந்தையை முத்தமிடுவது தவறில்லை, பெண்களை நான் தாயாக நினைக்கிறேன். அனைத்து பெண்களையும் பாஜக மதிக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Read More : கால்களில் கூச்ச உணர்வா..? கடுமையான வலியா..? கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Advertisement