For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

#Breaking: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் வீட்டில் சோதனை...!

10:08 AM Apr 07, 2024 IST | Vignesh
 breaking  பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர் வீட்டில் சோதனை
Advertisement

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி ரயிலில் நெல்லை கொண்டு செல்ல முயன்ற ரூ.3.99 கோடி பறிமுதல். புரசைவாக்கம் தனியார் விடுதியின் மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்கள், எம்.பி.க்கள் கார்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறதா எனவும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தாம்பரம் ரயில் நிலைய பகுதியில் போலீசாருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய ரூ.3.99 கோடி தொடர்பாக சென்னை சாலிகிராமத்தில் முருகன் என்ற பைனான்சியர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு சோதனை நடத்தியுள்ளனர். நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு உறவினர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. ரயிலில் பிடிபட்ட ரூ.3.99 கோடி நெல்லையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement