முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BJP | 'நிறைய சிரமங்களுக்கு பிறகு பாஜக குடும்பத்தில் இணைந்துள்ளேன்'..!! விஜயதரணி பேச்சு..!!

04:39 PM Feb 28, 2024 IST | 1newsnationuser6
Advertisement

"வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் இல்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது” என்று பாஜகவில் சேர்ந்தது குறித்து நெகிழ்ந்துள்ளார் முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.

Advertisement

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி முதல்முறையாக பேசினார். அப்போது, "நமது நாட்டை பிரதமர் மோடி எவ்வாறாக மாற்றியிருக்கிறார் என்பதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. அதன் வெளிப்பாடு தான் என்னை போன்றவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டு பாஜகவில் சேர்ந்து வருகின்றனர்.

எனக்கு மிக்க மகிழ்ச்சி. வேறொரு இடத்தில் இருப்பது போன்ற எந்த உணர்வும் எனக்கில்லை. என் சொந்த இடத்தில் இருப்பது போன்ற உணர்வுதான் உள்ளது. நேற்று திருப்பூரில் பாஜக தொண்டர்கள் என்னை அரவணைத்துக் கொண்டு ஆதரித்த விதம் என் கண்களை நிறைய வைத்துள்ளது. பிரதமர் மோடி மிகப் பெரிய மாற்றத்தை பெண்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ளார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். முத்தலாக் நடைமுறையை ரத்து செய்துள்ளார். இதெல்லாம் நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, அதற்கு நிதி ஒதுக்கியும் ஆதரித்துள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் இருக்கும் அரசு அப்படியில்லை. திமுக, அதிமுக என எந்த அரசாக இருந்தாலும், 110 விதியின் கீழ் கூட திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், நிதி ஒதுக்கமாட்டார்கள். விளம்பரம் செய்வதோடு அந்த திட்டங்களின் கதை அன்றே முடிந்துவிடும். சில நேரங்களில் அடிக்கல் கூட நாட்டுவார்கள். எனினும், திட்டங்கள் நிறைவேறாது.

நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு, நிறைய சிரமங்களுக்கு பிறகு ஒரு நல்ல இடத்துக்கு வந்துள்ளேன். நான் இனி பாஜக குடும்பத்தில் ஒருவர். பாஜகவுடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.

English Summary : After a lot of difficulties I have joined the BJP family - Vijayadharani

Read More : RIP | பெரும் சோகம்..!! பழம்பெரும் பிரபல நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் காலமானார்..!!

Advertisement
Next Article