For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"BJP 370, NDA 400-க்கு மேல்"… பாராளுமன்றத் தேர்தலுக்கு இலக்கு நிர்ணயித்த பிரதமர் மோடி.!

06:22 PM Feb 17, 2024 IST | 1newsnationuser7
 bjp 370  nda 400 க்கு மேல் … பாராளுமன்றத் தேர்தலுக்கு இலக்கு நிர்ணயித்த பிரதமர் மோடி
Advertisement

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனது இலக்குகளை தெளிவாக நிர்ணயித்திருக்கிறது. மொத்தம் உள்ள 545 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 370 இடங்களும் தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement

பாராளுமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி கட்சியின் இலக்கை தொண்டர்களிடம் மீண்டும் வலியுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தொண்டர்களிடம் உரையாற்றும் போது பாரதிய ஜனதா கட்சி 370 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி நான் ஒரு இடங்களுக்கு மேல் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார். பிரதமர் மோடி கூறியது வெறும் கணக்கல்ல அது ஜன சங்கத்தின் நிறுவனரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு பாரதிய ஜனதா கட்சி செலுத்தும் அஞ்சலி என பாஜகவின் தேசிய செயலாளர் வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் ஷியாம பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்தார். நேருவுக்கும் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகானுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்த ஒப்பந்தம் பின்னர் நேரு-லியாகத் ஒப்பந்தம் அல்லது டெல்லி ஒப்பந்தம் என அறியப்பட்டது

நேரு-லியாகத் ஒப்பந்தம் ஏப்ரல் 8, 1950 அன்று புது தில்லியில் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் இந்திய பிரிவினைக்குப் பிறகு கையெழுத்தானது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது நாட்டின் பல்வேறு இடங்களில் கலவரங்கள் நடைபெற்றன. குறிப்பாக இந்திய பகுதிகள் பாகிஸ்தானாக பிரிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தம் அடிப்படையில் இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினருக்கு சமமான குடியுரிமை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஒப்பந்தத்தை முக்கர்ஜி எதிர்த்தார். இது தொடர்பாக தனது கருத்தை முன்வைத்த அவர் " இந்தியா பாகிஸ்தான் பிரிவினை மதத்தின் அடிப்படையில் நடந்தது. எனவே பாகிஸ்தான் அங்குள்ள இந்து சிறுபான்மையினரை சமமாக நடத்தது" எனக் கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கூடுதலாக, சட்டப்பிரிவு 370ன் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதையும் முகர்ஜி எதிர்த்தார். இது தொடர்பாக பேசிய அவர், "ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள், இரண்டு பிரதமர்கள் மற்றும் இரண்டு கொடிகள் இருக்க முடியாது" எனக் கூறி தனது எதிர்ப்பை காட்டினார் .

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட அசல் சிறப்பு அந்தஸ்தின் கீழ், மாநிலம் அதன் சொந்த சட்டங்களால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இந்திய சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்களும் மாநிலத்திற்கு பொருந்தாது. அம்மாநிலத்தின் முதலமைச்சர் பிரதமருக்கு இணையானவராக கருதப்படுவார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனி கொடி வைத்திருக்கவும் அனுமதி உண்டு.

2019 ஆம் வருடம் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தான 370 வது பிரிவை ரத்து செய்து புதிய தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதுவரை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 1984 ஆம் வருட தேர்தலில் 514 தொகுதிகளில் 404 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுவே ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். தற்போது ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி 1984 ஆம் வருட தேர்தலில் பெரும் 2 இடங்கள் மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 370 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றினால் கடந்த 40 வருடங்களில் அந்த கட்சி வளர்ந்து வந்த பாதையில் இது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும்.

English summary
370 for BJP, NDA 400 Par: PM Modi Sets the Tone for Lok Sabha Elections

Read More: ’கோயில் குருக்கள் மீது மட்டுமே நிர்மலா சீதாராமனுக்கு அக்கறை’..!! கடுமையாக சாடிய கனிமொழி எம்பி..!!

Tags :
Advertisement