ஹை-ஸ்பீடில் பறந்த பைக்!. ரயில் பாலத்தின் மீது ஆபத்தான ஸ்டண்ட் செய்த இளைஞர்கள்!. பதபத வைக்கும் வீடியோ!.
Dangerous stunts: இணையத்தளங்களின் மோகம் அதிகரித்த பிறகு ஆபத்தான சாகசங்களில் ஈடுப்படுவோரை அதிகமாக பார்க்க முடிகிறது. அவ்வாறு, ரயில் பாலத்தின் மீது பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த இளைஞர்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் ஆபத்தான ஸ்டண்ட்கள் காணப்படுகின்றன. இது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிலர் ரயிலுக்கு அடியில் படுத்துக்கொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்குவதையும், ரயில் அவர்களைக் கடந்து செல்வதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ஆபத்தான ஸ்டன்ட் ஆனது பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், இவை அனைத்தையும் விட தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஜார்கண்ட் மாநிலத்தில் ஆற்றின் ரயில் பாலத்தின் மீது ஆபத்தான ஸ்டண்ட் செய்த இளைஞர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. @JharkhandRail என்ற பெயரில் பதிவிடப்பட்டுள்ள இந்த ஆபத்தான ஸ்டண்ட், பைக் ஓட்டுபவர் மட்டுமல்ல, அவரது பின்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு ஆபத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தின்போது ரயில் வந்திருந்தால் பெரும் விபத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த வீடியோ வைரலானதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். தனது பொறுப்பற்ற நடத்தையால் பலரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.