பள்ளியிலேயே கட்டிப்பிடித்து அத்துமீறிய ஆசிரியர்கள்!. லிப் டூ லிப் வேற!. முகம் சுளிக்க வைத்த வீடியோ!. ராஜஸ்தானில் பகீர்!
Rajasthan: ராஜஸ்தானில் பள்ளியில் பெண் ஆசிரியை, தலைமை ஆசிரியருடன் கட்டிப்பிடித்து ஆபாசமான செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தில் சலேரா கிராமம் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியரும், பெண் ஆசிரியையும் தகாத முறையில் ஆபாச செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, கேமிரா இருப்பது கூட தெரியாமல், பள்ளியின் அலுவலக அறைக்குள் இருவரும் கட்டிப்பிடித்து லிப் டூ லிப் அடிக்கும் காட்சிகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த மாணவர்கள், தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இருவரையும் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியர் தனது செல்வாக்கை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Readmore: தொடரும் சோகம்!. கள்ள சாராயம் குடித்து 7 பேர் பலி!. பீகாரில் அதிர்ச்சி!. விசாரணைக்கு உத்தரவு