For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Paytm' போச்சா கவலைப்படாதீங்க.! 'Bhim' செயலி ₹750/- கேஷ்பேக் தருகிறது.! அதை பெறுவது எப்படி.?

12:25 PM Feb 12, 2024 IST | 1newsnationuser4
 paytm  போச்சா கவலைப்படாதீங்க    bhim  செயலி ₹750   கேஷ்பேக் தருகிறது   அதை பெறுவது எப்படி
Advertisement

யுபிஐ வழி பண பரிமாற்றங்களுக்காக இந்தியர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு செயலிகளான கூகுள் பே மற்றும் ஃபோன் பே போன்ற செயலிகளைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாட்டிற்கு ஆர்பிஐ தடை விதித்த பிறகு, அதன் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க இந்திய செயலியான பீம் ஒரு அற்புத சலுகையை அறிவித்துள்ளது. ₹750 வரை கேஷ்பேக் பெறுவதற்கான இந்த சலுகை வருகிற மார்ச் 31 வரை மட்டுமே கிடைக்க உள்ளது.

Advertisement

நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா எனப்படும் NCPI தயாரித்த இந்திய யுபிஐ செயலியான பீம், தற்போது அதன் பயனாளர்களுக்கு ₹750 கேஷ்பேக் தருவதாக ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மீது ரிசர்வ் பேங்க் தற்போது தடை விதித்துள்ள நிலையில், அதன் பயன்பாட்டாளர்களை ஈர்ப்பதற்காக இப்படி ஒரு சலுகையை பீம் செயலி அறிவித்துள்ளது. தொடக்க காலத்தில் கூகுள் பே செயலியும், பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த பல கேஷ்பேக் சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கேஷ்பேக்கை பெறுவது எப்படி?

பீம் செயலி, அடிக்கடி வெளியூர் பயணங்கள் மற்றும் உணவகங்களுக்கு செல்வோருக்கு, ₹150 கேஷ்பேக் தருகிறது. இதற்கான பில் தொகையை, நீங்கள் பீம் செயலி மூலம் செலுத்தும் போது ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ₹30 கேஷ்பேக் வழங்கப்படும். அதேபோல் ரயில்வே பதிவிற்கும் டாக்ஸியில் செல்வதற்கும் கூட இந்த சலுகையை பயன்படுத்தலாம். இந்த பயன்பாட்டிற்காக ₹150 வரை கேஷ்பேக் கிடைக்கிறது.

உங்களது பீம் செயலியை, நீங்கள் பயன்படுத்தி வரும் ரூபே கிரெடிட் கார்டுடன் இணைத்தால் மீதமுள்ள 600 ரூபாய் கேஷ்பேக்கையும் பெற முடியும். ரூபே கிரெடிட் கார்டையும் பீம் செயலையும் இணைத்த பின்பு, செய்யப்படும் முதல் மூன்று பணப்பரிவர்த்தனைகளுக்கு, ₹100 வரை கேஷ்பேக் கிடைக்கும். பிறகு ₹200ஐ கடக்கும் 10 பண பரிமாற்றங்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் தலா ₹30 கேஷ்பேக் கிடைக்கும். இவ்வகையில் நீங்கள் ₹600 கேஷ்பேக்கை பெற முடியும்.

எரிபொருள் நிரப்புவதற்கும், பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றிற்கும் பணம் செலுத்தும் போது பீம் செயலியை பயன்படுத்துவோருக்கு 1% கேஷ்பேக் வழங்கப்படும். மின்சார கட்டணம், தண்ணீர் வரி போன்றவற்றுக்கு பீம் செயலியின் மூலம் பணம் செலுத்தும் போதும், கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் செலுத்தும் தொகை ₹100க்கு மேல் இருக்கும் போது மட்டுமே இந்த கேஷ்பேக் கிடைக்கும். வருகிற மார்ச் 31 வரை மட்டுமே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.

Tags :
Advertisement