முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பாரதம் சாதாரணமானது அல்ல’..!! ’அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமி’..!! ஆளுநர் ஆர்.என்.ரவி உரை..!!

05:46 PM Feb 10, 2024 IST | 1newsnationuser6
Advertisement

திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”10 ஆண்டுகளுக்கு முன், இந்தியா மக்கள் தொகை நிறைந்த நாடாக மட்டுமே இருந்தது. தற்போது, அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. உலகளாவிய பிரச்சனைகளுக்கு, நம் நாடு தீர்வை கொடுக்குமா? என்று பல நாடுகள் எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

Advertisement

இயற்கை பேரிடர்கள், கொரோனோ பரவல் மற்றும் பல நாடுகளுக்கு இடையே போர் போன்ற நெருக்கடியான நிலைகளை பார்க்க முடிகிறது. பொருளாதார ரீதியாக உயர்வாக உள்ள நாட்டையும், ஏழ்மையான சூழல் உள்ள நாட்டையும், ராணுவப்படை பலம் அதிகம் உள்ள நாட்டையும், படை பலம் குறைவாக உள்ள நாட்டையும் பார்க்கிறோம்.

ஆனால், கண்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து நம் நாட்டில், ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டியுள்ளோம். பாரதம் என்பது சாதாரணமானது ஒன்றும் அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தாய் பூமியாகவும், முன் உதாரணமாகவும் திகழ்ந்து வருகிறது. அதனால், தெய்வ குடும்பம் என்று போற்றப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 50% இயற்கை எரிசக்தியை பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.

Tags :
ஆளுநர் ஆர்.என்.ரவிஇயற்கை பேரிடர்கள்உலக நாடுகள்திருச்சி மாவட்டம்பாரதம்
Advertisement
Next Article