ஜாக்கிரதை!… மெனு கார்டை பார்த்து ஆர்டர் செய்யும்போது பதற்றமா இருக்கா?… இது ஒரு வியாதியாம்!… ஆய்வில் தகவல்!
உணவகத்தில், மெனு கார்டை பார்த்து உணவு ஆர்டர் செய்யும்போது, 18- 24 வயதுடைய இளைஞர்கள் அதிகளவில் பதற்றமடைவதாக புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகவே வீட்டு சமையலை விட வெளியே உணவகங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் சுவை அதிகமாக இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை நம் வீடுகளில் கிடைப்பதை போல ஆரோக்கியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுவை என்று வரும்போது பெரும்பாலும் வீட்டு சமையலை விட நன்றாகவே இருக்கின்றன. வீடுகளில் தினமும் ஒரே விதமான உணவு வகைகளை நாம் சமைப்பதில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவு என மாற்றி மாற்றி சமைக்கிறோம்.
ஆனால் உணவகங்களை பொறுத்தவரை அவர்களது மெனுவும் தினந்தோறும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது அதிலும் முக்கியமாக அவர்களின் உணவகத்திற்கு பெயர் போன சிறப்பு உணவு வகைகளில் சிறப்பு கவனம் செலுத்தி சமைக்கின்றனர். தினந்தோறும் ஒரே மாதிரியான உணவு வகைகளை சமைப்பதால் அவை நாளடைவில் அவர்களுக்கு பழக்கமாகி விடுகின்றன. இந்த அனுபவத்தினால் அந்த உணவுப் பொருட்களை சமைக்கும் போது அதில் அளவுகளும் சுவையும் மிக சரியாகவே இருக்கின்றது. இதனால், மக்கள் அதிகளவில் ஹோட்டல் உணவுகளை நாடி செல்கின்றனர். இப்படி இருக்கையில், ஹோட்டலி சாப்பிடும் முன் மெனு கார்டை பார்க்கும் போது சிலருக்கு பதற்றம் ஏற்படும். எதை ஆர்டர் செய்யலாம் என்ன சாப்பிடலாம் என்று. அது ஏன் என்ன காரணம் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹோட்டலில் சாப்பிடும் போது நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்வோம். ஆனால் ஒரு ஒற்றுமையாக பலரும் மெனுவில் பார்த்து ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. சைன் ப்ரெஸ்ஸோ என்ற இங்கிலாந்து நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் படி 18-24 வயதுடைய ஆண்கள் உணவு ஆர்டர் செய்ய பதட்டமடைவதாக கண்டறிந்துள்ளனர். இந்த வியாதிக்கு மெனு ஆங்க்சைட்டி என்று பெயராம். இந்த மெனு ஆங்க்சைட்டி இருப்பதனால் 34% ஆண்கள் தங்கள் உடன் வருபவர்களை ஆர்டர் செய்ய சொல்கிறார்களாம்.