”பெத்த மகளுக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க முடியுமா”..? விபச்சாரத்திற்கு அழைத்த பெண் சூட்கேஸில் பிணமாக மீட்பு..!! நெல்லூர் To மீஞ்சூர் சம்பவம்..!!
நெல்லூரில் பெண்ணை கொலை செய்து, சடலத்தை சூட்கேஸில் அடைத்து ரயிலில் கொண்டு வந்த தந்தை, மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (46). இவரது மகள் தேவிஸ்ரீ (18). கல்லூரி மாணவி. இருவரும் சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் நேற்று மாலை வந்துள்ளனர். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் இருவரும் 2 சூட்கேசுகளுடன் மீஞ்சூரில் இறங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் ரயில் இறங்கிய இடத்திலேயே சூட்கேஸை விட்டுவிட்டு நைசாக நழுவியுள்ளனர்.
அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த ரயில்வே ஊழியர் ஒருவர், அவர்களை பின் தொடர்ந்துள்ளார். அவர்கள் வைத்துவிட்டு சென்ற சூட்கேஸில் ஏதோ மர்மப் பொருள் இருப்பத கண்டு உடனே ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாரும், கும்மிடிப்பூண்டி காவல் நிலைய போலீசாரும், மர்ம சூட்கேஸை திறந்து பார்த்தனர். அதில், பெண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண்ணிற்கு 55 வயது இருக்கும்.
மற்றொரு சூட்கேஸில் தேவிஸ்ரீ கொண்டுவந்த பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் நெல்லூரில் இருந்து சூளூர்பேட்டை வந்து அங்கிருந்து ரயிலில் சூட்கேசுடன் சென்னை நோக்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். பாலசுப்பிரமணியத்திடம் நடத்திய விசாரணையில், 'எனது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். எனது மகளை அப்பெண், விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தார்.
அதற்கு எனது மகள் சம்மதிக்கவில்லை. இதுபற்றி என்னிடம் மகள் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நான், அப்பெண்ணிடம் சென்று வாக்குவாதம் செய்தேன். பிறகு கோபத்துடன் அந்த பெண்ணை தாக்கினேன். இதில் அவர் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாத நான், சடலத்தை ரகசியமாக அப்புறப்படுத்தி எங்காவது கொண்டு போய் போட்டுவிடலாம் என நினைத்தேன். அந்த பெண் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி, சூட்கேஸில் அடைத்தோம். பிறகு, ரயிலில் ஏறி சென்னைக்கு வர திட்டமிட்டோம். சூளூர்பேட்டையில் ரயிலில் ஏறினோம். ரயில் மீஞ்சூர் வந்தபோது, இங்கு சூட்கேஸை வைத்துவிட்டு சென்றுவிடலாம் என திட்டமிட்டோம்.
சூட்கேஸுடன் இறங்கி பிளாட்பாரத்தில் வைத்துவிட்டு, தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டுவிட்டோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் வி.கே மீனா, கொருக்குப்பேட்டை இருப்பு பாதை காவல் உதவி ஆய்வாளர் பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : நடிகை கஸ்தூரிக்கு எதிராக வெடித்த பஞ்சாயத்து..!! காவல்நிலையத்தில் குவியும் புகார்கள்..!!