For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்.. நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!! ஏப்ரல் 1 முதல் அமல்..

Government notifies Unified Pension Scheme, to be effective from April 1
07:47 PM Jan 26, 2025 IST | Mari Thangam
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்   நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு     ஏப்ரல் 1 முதல் அமல்
Advertisement

அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒப்புதல் வழங்கிய நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அறிவிக்கையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) தேர்வு செய்தவர்கள், வரும் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு (UPS) தகுதியானவர்களாக இருப்பார்கள்.

Advertisement

2003ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் முடிவுக்கு வந்த நிலையில், 2004ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்தத் திட்டம், ஊழியர்களுக்கு உத்திரவாத ஊதியங்கள், கட்டமைக்கப்பட்ட ஓய்வூதியப் பலன் மற்றும் கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதேபோல் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக கிடைக்கும். அதேபோல் ஓய்வு பெற்ற ஊழியர் மறைந்துவிட்டால், அவரின் அதிகாரப்பூர்வ கணவன்/மனைவி-க்கு 60 சதவிகிதம் ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல் ஊழியர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் பணியை ராஜினாமா செய்துவிட்டு சென்றால், பனிக்கொடையுடன் கூடிய குறிப்பிட்ட அளவிற்கான ரொக்கம் கிடைக்கும். அவருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. அதேபோல், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்த அரசு ஊழியர்கள், கடைசி 12 மாதங்கள் பெற்ற சராசரி ஊதியத்தின் அடிப்படையில் 50 சதவிகிதம் அளவிற்கு ஓய்வூதியம் அளிக்கப்படும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) முக்கிய நன்மைகள் :

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) திட்டத்தை தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்களை வழங்குகிறது.25 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்கள் தங்கள் கடைசி 12 மாத சராசரி அடிப்படை ஊதியத்தில் 50%  தொகையை உத்திரவாத ஓய்வூதியமாக பெறுவார்கள். 25 ஆண்டுகளுக்கும் குறைவான சேவையாற்றியவர்களுக்கு, விகிதாசார அளவில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

கூடுதலாக, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் உறுதி செய்யப்படும். ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணைக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய தொகையிலிருந்து 60% பேமிலி பென்ஷனாக வழங்கப்படும். இந்த விரிவான சலுகைகள், ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Read more : மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளம்..! மிஸ் பண்ணிடாதீங்க..

Tags :
Advertisement