மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதற்க்கு நாம் தினசரி குறைந்தது 20 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி உடல் எடை குறைப்பதற்கு மட்டும் இல்லாமல், நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க, இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால் நாம் எப்போது நடக்கிறோம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. நடை பயிற்சி செய்ய எது சரியான நேரம் என்பதை அறிந்து நடைப்பயிற்சி மேற்கொண்டால் அதன் முழு பலனையும் பெற முடியும். காலை அல்லது மாலை, எந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது என்பதை குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
காலையில் நடை பயிற்சி செய்வதால், ஆரோக்கியமான மனநிலை உருவாகும், உடல் எடையை குறைக்க முடியும். மன அழுத்தம் உள்ளவர்கள் காலையில் நடை பயிற்சி செய்வது மிகவும் நல்லது. ஆய்வின் படி, காலையில் நீங்கள், வீட்டிற்குள்ளேயே நடப்பதை விட வெளியில் நடப்பது சிறந்த பலனை தரும். எவ்வளவு வேகமாக நாம் நடைப்பயிற்சி செய்கிறோமோ அந்த அளவுக்கு நமது உடலில் உள்ள கலோரிகள் வேகமாக குறையும். இதனால் உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை பழகிக்கொள்ளுங்கள். மேலும், காலையில் நடை பயிற்சி செய்தால் பசி ஹார்மோன்கள் சீராக செயல்படும். இதனால் நமக்கு அதிகம் பசிக்காது.
மாலை நேர நடைப்பயிற்சி என்பது அப்படியே காலை நடை பயிற்சிக்கு எதிரான ஒரு பயிற்சியாகும். மாலை நடை பயிற்சியில் நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் சேர்ந்து நடை பயிற்சி செய்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு சிலர் இரவு உணவு அருந்திய பிறகு உடற்பயிற்சி செய்வார்கள். இதனால் உணவு மிக விரைவாக செரிமானம் ஆக உதவும். இதனால் அஜீரணம் போன்ற பாதிப்புகள் தடுக்கப்பட்டு, உடல் எடை அதிகரிப்பையும் குறைக்கும். மேலும் நாம் உணவு அருந்திய பிறகு உடற்பயிற்சி செய்வதால், நாம் சாப்பிட்ட உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மிக எளிதில் உடலில் உறிஞ்சப்பட்டு, ஆரோக்கியத்தை மேம்படும்.
இரவு நடை பயிற்சி செய்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். தூக்க பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெற முடியும். எனவே மாலை மற்றும் காலை இரண்டு வேலை நடைபயிற்சியும் சிறந்த பலனை தருகின்றன. உங்களுக்கு எந்த நேரம் சரியானதாக மற்றும் வசதியானதாக இருக்கிறதோ அதனை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி செய்யலாம். ஆனால் நீங்கள் நடைபயிற்சியுடன் சேர்த்து, ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும் அப்போது தான் சிறந்த பலனை நம்மால் முழுமையாக பெற முடியும்.
Read more: உங்கள் குழந்தைகளுக்கு, காலை உணவாக பாலும் பழமும் கொடுக்கலாமா??? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..