நாட்டுச்சக்கரையா.. வெல்லமா..? உடல் எடையை குறைக்க இது தான் சரியான சாய்ஸ்..!
உடல் எடைகுறைய வேண்டும் என நினைப்பவர்கள் தற்போது அதிகம் பின்பற்றுவது வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் கலந்த பானங்களை குடிப்பது. உண்மையில் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் உடல் எடை குறைப்பில் உதவுகிறதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளை சர்க்கரை போன்ற அதிக இனிப்பான உணவுகளில் காலோரிகள் அதிகமாக இருக்கும். அதிக கலோரிகள் அதிக உடல் எடையை உண்டாக்கும். இதனால் தற்போது பெரும்பாலும் உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள் வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை, தேன் , வெல்லம் மற்றும் கருப்பட்டி போன்ற இயற்கையிலேயே இனிப்பு நிறைந்த உணவுகளை விரும்புகின்றனர். டீ, காபியிலும் இதனையே விரும்புகின்றனர். வீடுகளில் மட்டுமல்லாது தற்போது டீ கடைகளிலும் நாட்டுசர்ச்சரை, வெல்லம் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லத்தை ஒப்பிடும் போது உடல் எடை குறைப்பில் வெல்லம் தான் அதிக நன்மையை தருகிறது. ஏனெனில் வெல்லத்தில் கிளைசெமிக் இன்டெஸ் குறைவாக இருப்பதால் செரிமானம் சீராகி இன்சுலின் அதிகமாவதை தடுக்கிறது. மேலும் நாட்டு சர்க்கரையை விட வெல்லம் அதிக அடர்த்தி கொண்டிருப்பதால் குறைவான அளவு சேர்த்தாலே இனிப்பு சுவை கிடைத்துவிடும். இதனால் குறைந்த அளவு கலோரி மட்டுமே உடலில் சேரும். குறைவான கலோரியை எடுத்து கொள்வது உடல் எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Read more: ஒரு ஸ்பூன் போதும்..! புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கலாம்..