நீரிழிவு நோயாளிகள் எந்த அரிசி சாப்பிட்டால் நல்லது தெரியுமா??
ஆரோக்கியம் என்று வந்துவிட்டால் உடனே பலர் முதலில் தவிர்ப்பது அரிசியை தான். அரிசி சாதம் ஆரோக்கியம் இல்லை என்ற நம்பிக்கை மக்கள் மனதில் அதிகளவு உள்ளது. ஆனால் அது முற்றிலும் தவறு. அரிசி நமது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப அளவாகத்தான் அரிசியை சாப்பிட வேண்டும். இன்று உள்ள காலகட்டத்தில், பலர் பல விதமான அரிசியை வாங்கி சாப்பிடுகின்றனர். அந்த வகையில், சிகப்பு அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, குடவாழை, துளசிவாச சீரகச்சம்பா, கண்டசாலி போன்ற எண்ணற்ற அரிசி வகைகள் உள்ளது. அதில் எது சிறந்தது என்று பலருக்கு தெரியாது. எந்த அரிசியில் அதிக சத்துக்கள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
கர்நாடக மாநிலத்தில் சிவப்பு அரிசி வகைகளில் ஒன்றான ராஜமுடி ரைஸ், நமது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த அரிசியில் வித்தியாசமான சுவை இருப்பது மட்டும் இல்லாமல், அதில் அதிகளவு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. ஆம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியை விட, ராஜமுடி ரைஸ் குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது. இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக கலந்து சர்க்கரை அளவு அதிகம் ஆகாமல் தடுக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசி சாப்பிடுவது நல்லது. மேலும் இதில், பிரவுன் அரிசிகளில் உள்ளதை விட நார்ச்சத்து அதிகம். இதனால் சாப்பிட்ட பின் அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம்.
ராஜமுடி அரிசியை அரை மணி முதல் ஒரு மணி வரை ஊற வைத்து சமைத்தால், செரிமானம் சீராக இருப்பதுடன் சுவையும் அதிகரிக்கும். இதில் மற்ற அரிசிகளில் இருப்பதை விட அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் சுவை உள்ளது. அதிகளவு ஆரோக்கியம் தரும் அரிசியை வாங்க நினைப்பவர்கள் கட்டாயம் இந்த அரிசியை வாங்கி சாப்பிடுங்கள்..
Read more: ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது சாத்தியமா? அறிகுறிகள்.. காரணங்கள் என்னென்ன?