முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த பதிவை படியுங்க... இனி கணவன் மனைவி இடையே சண்டையே வராது!

best relationship advice for couples
05:54 AM Jan 16, 2025 IST | Saranya
Advertisement

இடையில் வந்து இறுதி வரை இருக்கும் ஒரு உறவு என்றால் அது கணவன் மனைவி உறவு மட்டும் தான். சம்மந்தம் இல்லாத ஒருவருக்காக பல உறவுகளை உதறித்தள்ளி வரும் இந்த உறவு, நமது வாழ்கையில் மிக முக்கியமான ஒன்று. ஆனால், இன்றுள்ள காலகட்டத்தில், கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருப்பது இல்லை. அதிக சண்டைகள் மட்டுமே ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது இல்லை. உதாரணத்திற்க்கு, கணவன் பால் என்றால், மனைவி அதில் கலக்கப் படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டுமாம். ஏனென்றால், பாலில் எவ்வளவு தண்ணீர் கலந்தாலும், அது எப்போதும் தண்ணீரை தனியே பிரித்துக் காட்டாது.

Advertisement

அதே சமயம், பாலை தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை. அதே போல், கணவன் மனைவி ஒன்றாக இருக்க வேண்டுமாம். இதைத்தான் நமது முன்னோர்கள் செய்தார்கள். அதனால் தான் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விவாகரத்து என்பது பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில், திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே விவாகரத்து வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். நமது தாத்தா பாட்டியை கவனித்தால் உங்களுக்கு தெரியும். என்ன தான் சண்டை வந்தாலும், பெரும்பாலும் அதை அவர்களே சரி செய்து கொள்வார்கள். ஆனால் தற்போது, சாதாரண சண்டையை கூட 10 பேருக்கு போன் செய்து சொல்லிவிடுகிறார்கள்.

இதனால், அவர்களுக்குள் இருக்கும் கோவம் அதிகரிக்கத்தான் செய்யும். அதனால் இந்த தவறை செய்யாதீர்கள். இதற்கு பதில், கோவமாக இருக்கும் உங்கள் துணையை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் நீங்களே சமாதனம் செய்து பாருங்கள், இதை விட அழகான காதல் இருக்கவே முடியாது. இந்த ஒன்றை தான் இன்று பலர் எதிர்பார்கின்றனர். சண்டை வருவது இயல்பு தான். ஆனால் அதை சமாதனம் செய்வதில் தான் காதலின் உருவமே இருக்கிறது. இதை மட்டும் நாம் செய்து விட்டால் போதும். இனி விவாகரத்து என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் போய் விடும். நமது உணர்வை புரிந்து கொண்டார்கள் என்ற உறுதி தான் மிக முக்கியமான ஒன்று.

அதற்கு பதில், நீ செய்தது தவறு, உன்னால் தான் நான் அப்படி நடந்துக் கொண்டேன், நீதான் காரணம் என்று குறை சொல்லிக்கொண்டே இருந்தால், கட்டாயம் உங்கள் வாழ்கையின் வசந்த காலதை இழந்து விடுவீர்கள். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் விட்டுக்கொடுத்து போவதால் என்றும் கெட்டுப்போக மாட்டீர்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்களின் பார்வையில் நீங்கள் ராஜாவாகவும், ராணியாகவும் தான் என்றும் இருப்பீர்கள். எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு… இன்னொரு முக்கியமான விஷயம், உங்கள் வாழ்க்கை துணை உயிரோடு இருக்கும் வரை, உயிர் இல்லாத போனை ஓரம் வைத்து விட்டு, அவர்களிடம் நேரம் செலவழியுங்கள்..

Read more: குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்.. இந்த மூலிகையை பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

Tags :
egohusbandRelationship
Advertisement
Next Article