அல்சர் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த ஒரு பழம் சாப்பிடுங்க, இனி வயிற்று வலியே இருக்காது!! டாக்டர் சிவராமன் அட்வைஸ்..
தெருவில் விற்கப்படும் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் சாப்பிட்டு இன்று பல இளைஞர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை அல்சர் தான். சரியான நேரத்தில் சாப்பிடாமலும், சரியான நேரத்தில் தூங்காமலும் இருப்பதால் வயிறு சார்ந்த பிரச்சனைகளை கட்டாயம் ஏற்படும். இன்று உள்ள அவசர காலகட்டத்தில், இந்த இரெண்டையும் செய்வதற்கு பலருக்கு நேரம் இருப்பது இல்லை. அல்சரை சரியான நேரத்தில் நாம் கவனிக்கா விட்டால் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில், இது போன்ற வயிற்று பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக, மருத்துவர் சிவராமன் வாழைப்பழத்தை பரிந்துரைக்கிறார். ஏனென்றால், இயல்பாகவே குடல் புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது வாழைப்பழத்திற்கு . இதனால், அல்சர், வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் தங்களின் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது வாழைப்பழத்தையும் சாப்பிடலாம். குறிப்பாக, உணவு சாப்பிடுவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
பொதுவாக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், அல்சர் போன்ற வயிற்றுப் புண்களை ஆற்ற தயாரிக்கப்படும் மருந்துகளில், வாழைப்பழங்களை பயன்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும், வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே நல்ல உறக்கத்தை கொடுக்கும் தன்மை இருப்பதால், நாள் முழுவதும் கடினமாக உழைத்து சோர்வாக இருப்பவர்கள், வாழைப்பழங்களை சாப்பிட்டால் அது அவர்களுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Read more: இது தெரிஞ்சா, இனி நின்றுக்கொண்டே தண்ணீர் குடிக்க மாட்டீங்க.. வாத நோய் கூட ஏற்படுமாம்!!!