நரம்பு தளர்ச்சிக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் பானம்!!! 1 வாரம் குடித்து பாருங்க, உங்களுக்கே வித்தியாசம் தெரியும்..
பொதுவாக, ஆறுதல் கூறும் பலர் சொல்லும் ஒரு காரியம், ரொம்ப கவலை படாத என்பது தான். இதை தெரிந்து சொல்கிறார்களா இல்லை தெரியாமல் சொல்கிறார்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் உண்மையில், அதிகம் கவலை படுவதால் நரம்பு தளர்ச்சி உண்டாகும். ஆம், அதே சமயம் மது பழக்கம் உள்ளவர்களுக்கும் நரம்பு தளர்ச்சி பாதிப்பு ஏற்படும். இதற்காக லட்சங்கள் செலவு செய்யும் பலர் உள்ளனர். ஆனால் இந்த பாதிப்பை சிகிச்சை இல்லாமல், இயற்கையாகவே குணமாக்க முடியும்.
இதற்கு முதலில், நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம், உடல் நடுக்கம், இதய துடிப்பு அதிகரித்தல், அதிகளவு வியர்த்தல், தசை வலி ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், தாமதம் இல்லாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சனையில் முடிந்து விடும்.
முதலில் கனிந்த வாழைப்பழம் ஒன்றை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு பேரிச்சம் பழத்தின் விதையை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நான்கு பாதாம் பருப்பையும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பசும் பால் ஊற்றி, மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வரும் போது, வாழைப்பழத் துண்டுகளை போட்டு நன்கு கலந்துவிட வேண்டும்.
பிறகு, பாலில் பேரிச்சம் பழத் துண்டுகளையும் போட்டு நன்கு கலந்து விடுங்கள். பின்னர், பாதாம் பருப்பையும் பாலில் போட்டு, பால் கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது பாலில் தேவையான அளவு தேன் சேர்த்து குடிக்கலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சி பாதிப்பு குணமாகி விடும். இது ஒரு பக்கம் இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் தியானம் அல்லது யோகா செய்து மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
குறிப்பாக, மது பழக்கம் இருந்தால் அதை விட்டு விட வேண்டும். அதே போல், அதிக டீ அல்லது காபி குடிக்க கூடாது..