ட்ரெண்டாகும் 'செங்காலி மாலைகள்'.! யார் அணியலாம்.? பலன்கள் என்ன.?
கருங்காலி மாலைகள் பொது மக்களிடம் வேகமாக பிரபலம் அடைந்து வந்தது. சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் பலரும் இந்த கருங்காலி மாலைகளை அணிந்து வந்தனர். தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கூட இந்தக் கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலைகளை அணிந்திருந்தார். இதனால் பொதுமக்களும் இந்த மாலைகளை அணிய தொடங்கினார். இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தெய்வீக சக்தி பெரும்பாலான மக்கள் இதை அணிவதற்கு மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது.
தற்போது செங்காலி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மாலைகளின் விற்பனை அதிகரித்திருக்கிறது. இந்த மாலைகளையும் பொதுமக்களும் பிரபலங்களும் வாங்கி அணிய துவங்கியிருக்கின்றனர். கருங்காலி மாலைகளில் இருப்பதைப் போன்று இந்த செங்காளி மாலைகளும் தெய்வீக சக்தியும் மற்றும் பல மருத்துவ பலன்களை உள்ளடக்கியது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். செங்காலி மரமானது அதிர்ஷ்டத்தை தரக்கூடியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த மரங்கள் தேக்கு மரத்தை விட பலமானது என்றும் பண்டைய காலங்களில் கோவில் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். இந்த மரங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கிறது என்றும் செங்காளி மரங்களை வீட்டில் வளர்க்கும் போது கெட்ட சக்திகள் எதுவும் வீட்டை அண்டாது எனவும் தெரிவிக்கின்றனர். பண்டைய காலங்களில் இந்த மரத்தில் இருந்து தொட்டில் மற்றும் கட்டில்கள் செய்து பயன்படுத்தியதாகவும் தற்போது இவற்றில் இருந்து மாலைகள் செய்து அதன் சக்தியை பெறலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த மாலைகளை அணிந்து கொள்ளும் போது உயிருக்கு பாதுகாப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். செங்காலி மாலைகள் மந்திரங்களை உட்கிரகித்து தங்களுக்குள் ஈர்த்து வைக்கும் சக்தி கொண்டதாம் . இவற்றை வாகனங்களில் வைத்திருக்கும் போது விபத்துக்கள் ஏற்படுவதில் இருந்து தடுக்கும் வல்லமையும் இவற்றிற்கு இருப்பதாகவும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். கருங்காலி மாலைகளைப் போலவே இரு பாலினத்தவரும் இந்த செங்காளி மாலைகளையும் பயன்படுத்தலாம். அனைத்து ராசியினருக்கும் இந்த மாலையை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான நன்மைகள் இருக்கிறது.