For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாதவிடாய் காலத்தில் அன்னாசி பழ ஜூஸ் குடிக்கலாமா.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

05:45 AM Dec 04, 2023 IST | 1newsnationuser4
மாதவிடாய் காலத்தில்  அன்னாசி பழ ஜூஸ் குடிக்கலாமா   வாங்க தெரிஞ்சுக்கலாம்
Advertisement

பருவமடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த சுழற்சியின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதோடு தசை பிடிப்பு மற்றும் வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இவை பெண்களின் ஹார்மோன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு அன்னாசி பழச்சாறு ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது.

Advertisement

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மாங்கனிஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இந்த பழச்சாரினை மாதவிடாய் வந்த பெண்கள் குளிக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் தசை பிடிப்பு வயிற்று வலி குறைகிறது. மேலும் அதிகப்படியான ரத்தப்போக்கும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அன்னாசி பழத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து மாதவிடாய் காலத்தில் இழக்கும் ரத்தத்தை ஈடு செய்ய உதவுகிறது. இவற்றில் இருக்கும் வைட்டமின் சி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் இது நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தை அதிகம் கொண்டுள்ளதால் வயிற்று வலி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

Tags :
Advertisement