மாசிமகம் நாளில் புனித நீரில் நீராட முன்னோர்கள் சொன்னதற்கு காரணம், இதுதான் தெரியுமா.!?
தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறப்பான மாதமாக கருதப்படுவது மாசி மாதம் தான். ஏனெனில் மாசி மாதத்தில் வரும் ஒரே நாளில் பௌர்ணமியும், மகம் நட்சத்திரமும் வருவது தான் இம்மாதத்தில் சிறப்பாக கருதப்பட்டு வருகிறது. மேலும் இந்த சிறப்பான நாளில் விரதம் இருந்து குலதெய்வத்தை வழிபாடு செய்து ஒரு சில தானங்களை செய்து வந்தால் பல அதிர்ஷ்டங்களும், நன்மைகளும் உண்டாகும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மாசி மகம் நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி அன்றைய நாள் முழுவதும் விரதம் இருந்து பலவிதமான தானங்களை செய்து வந்தால், முன் ஜென்ம பாவங்கள் போக்குவதோடு, சகல செல்வங்களையும் நமக்கு தருகிறது என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மாசி மகம் நாளில் புனித நீராட வேண்டும் என்று நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு காரணமாக கூறப்படுவது மாசி மகம் நாளில் புனித நீராடினால் தோஷங்கள் நீங்கும், கோடீஸ்வர யோகம் கிடைக்கும், இதுவரை தடை ஏற்பட்டு வந்த சுப காரியங்கள் நல்லபடியாக முடியும். இது போன்ற பல நன்மைகளையும் மாசிமகம் நீராடல் நமக்கு தருகிறது என்று கூறுகின்றனர். இதன்படி நாளை மாசிமகம் பௌர்ணமி சேர்ந்து வரும் சிறப்பு நாளன்று புனித நீராடி விரதம் இருந்து கடவுளுக்கு பிரார்த்தனை செய்து பல தானங்களை செய்து வருவது ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.