For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இறைவனின் மறு உருவமான விபூதியை பயன்படுத்துவதால் உடலில் இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா.!

07:10 AM Feb 01, 2024 IST | 1newsnationuser5
இறைவனின் மறு உருவமான விபூதியை பயன்படுத்துவதால் உடலில் இவ்வளவு நன்மைகளை ஏற்படுத்துமா
Advertisement

பொதுவாக கோயிலுக்கு சென்றாலே விபூதி மற்றும் குங்குமம் நெற்றியில் பூசாமல் வரமாட்டோம். அந்த அளவிற்கு விபூதி முக்கியத்துவமானதாக இருந்து வருகிறது. விபூதி என்றாலே செல்வம் மற்றும் இறைவனின் மற்றொரு உருவமாக நம்பப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பெரியவர்கள் உடல் நலனில் ஏற்படும் நோய்களை விபூதியை மட்டும் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தனர். இவ்வாறு விபூதி பல்வேறு வகையான நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

விபூதியை நம் நெற்றியில் வைக்கும் போது நம் இஷ்ட தெய்வத்தை வணங்கி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் பெருவிரல் மற்றும் சுண்டு விரலை ஒன்றாக வைத்துக்கொண்டு மற்ற மூன்று விரல்களிலும் விபூதியை முழுவதுமாக எடுத்துக்கொண்டு நெற்றியில் இடவேண்டும். இவ்வாறு செய்யும் போது நம் உடலில் ஏற்படும் நோய்களை தீர்க்கும்.

விபூதியை பூசுவதால் ஏற்படும் நன்மைகள்
1. எந்த காரியத்தை செய்ய போவதற்கு முன்பாக விபூதியை பூசி கொள்வது அந்த காரியம் நல்லபடியாக முடியும் என்று நம்பப்படுகிறது.
2. விபூதியை பூசி கொள்வதால் பேச்சு திறன், நியாபக சக்தி, லட்சுமி கடாட்சம், நோய் நொடியற்ற வாழ்வு போன்றவை கிடைக்கும்.
3.  நீர் இல்லாத நெற்றி பாழ் என்று திருநீர் இல்லாத நெற்றியை குறித்து அவ்வையார் பாடல் பாடியிருக்கிறார்.
4. நெற்றியில் திருநீர் பூசினால் மனப்பதட்டம் போன்ற நோய்களை போக்கி மன அமைதியை ஏற்படுத்தும்.
5. நாம் பூசும் விபூதி கண்டிப்பாக மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட தூய விபூதியாக இருந்தால் உடலில் பல நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும்.
6. வேலைக்கு அல்லது பள்ளிக்கு செல்லும் போது நெற்றி நிறைய விபூதி பூசி கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
7. குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், பிரதோஷம், சிவராத்திரி போன்ற நாட்களில் கோயிலுக்கு சென்று திருநீர் பூசிக் கொள்வது நன்மையை பயக்கும்.
இவ்வாறு திருநீறு பல நன்மைகளை நம் உடலுக்கு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement