வயிற்றில் உள்ள பூச்சிகளை ஒரே நாளில் அழிக்கும் அற்புத காய்.!?
பொதுவாக வெப்ப மண்டலங்களான ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இந்த மருத்துவ தன்மை நிறைந்த சுண்டைக்காய் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் சுண்டைக்காயை ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நோயை குணப்படுத்தும் சுண்டைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?
1. ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவி புரிகிறது.
2. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாடை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
3. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.
4. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்த நாளங்கள் சீராக செயல்பட வைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
5. குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழு பூச்சிகளை மலம் மூலமாக வெளியேற்றி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
6. சுண்டைக்காயல் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் சருமம் பொலிவாக இருக்கவும் உதவி செய்கிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய சுண்டைக்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் சாப்பிடுவதற்கு தயங்குவார்கள். இதற்கு சுண்டக்காயை மோர், உப்பு கலந்து வத்தலாக செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது இந்த சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பாடுடன் கலந்து சாப்பிடலாம்.