காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்??? நிபுணர் கூறும் அறிவுரையை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..
பெரும்பாலான மக்கள் காரமான உணவுகளை சாப்பிட விரும்புவது உண்டு. காரம் இல்லாத உணவை சாப்பிட்டால், சாப்பிட்ட உணர்வே இல்லை என்று அவர்கள் கூறுவது உண்டு. பொதுவாக ஒரு உணவிற்கு சுவை என்றால் அதை மசாலாப் பொருட்கள் தான் கொடுக்கும். சுவை ஒரு பக்கம் இருந்தாலும், மிளகாய்யை நீங்கள் அதிகம் சாப்பிட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆம், அதிக காரமான உணவை சாப்பிட்டால் கட்டாயம் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதே சமையம், காரமான உணவுகளை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆம், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மிளகாயில் உள்ள கேப்சைசின் இதயத்திற்கு மிகவும் நல்லது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மிளகாயில் உள்ள கேப்சைசின், அழற்சியை குணப்படுத்துகிறது, இன்ஃபிளமேஷன் மற்றும் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் ஆகியவை, குறைக்க உதவும். இதனால் காரமான உணவை சாபிட்டால் மாரடைப்பு ஏற்படும் என்று நீங்கள் பயப்பட வேண்டாம். மேலும், மிளகாயில் உள்ள கேப்சைசின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, எடையை பராமரிக்க உதவும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். நீங்கள் காரணமான உணவுகளை தயிர், வெள்ளரி போன்ற குளிரூட்டும் உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், இது செரிமானத்திற்கு மிகவும் உதவும். அதே சமையம், காரமான உணவுகளை சாப்பிடும் போது அதிக அளவு தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். அப்போது தான், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.