டயட் என்ற பெயரில் அரிசி சாதத்தை ஒதுக்குபவரா நீங்கள்?? கட்டாயம் இதை படியுங்கள்…
அரிசி சாதம் நமது முன்னோர்களால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் நமது உணவு பாரம்பரியத்தைச் சேர்ந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், ஒருவர் உடல் எடையை குறைக்க நினைத்து விட்டால் முதலில் அவர்கள் செய்வது அரிசி சாதம் சாப்பிடுவதை நிறுத்துவது தான். இதற்க்கு முக்கிய காரணம், அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடும் என்ற பிரபலமான கருத்து தான். இந்த கருத்து உண்மையா? இல்லை, அரிசி சாதம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. அரிசியில் நார்ச்சத்து மட்டும் இல்லாமல், முழு தானியங்களின் அனைத்து பண்புகளும் அரிசியில் உள்ளது. இதனால், நம் உடல் எடை கட்டுப்படுவதோடு, உடலில் இன்சுலின் சுரப்பும் பராமரிக்கப்படுகிறது. மேலும், நமது உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான ஆற்றலை அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அளிக்கிறது.
அரிசி சாதம் எளிதில் ஜீரணமாகக் கூடியது. மறுசீரமைப்பு தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. இது சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக வயதான மற்றும் மிகவும் இளம் வயதில் இவை கண்டிப்பாக தேவைப்படுகிறது. அரிசியில் சோடியத்தின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாக இருக்கும். பிரவுன் ரைஸில், நார்ச்சத்து உள்ளது. மேலும் இது பல வகையான புற்றுநோய்களைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும். அரிசியில் இருக்கும் இந்த கூறுகள் புற்றுநோய் செல்கள் வளர அனுமதிக்காது என்று பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அரிசி ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லாமல், அரிசியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்க உதவும்.
அரிசியில் மட்டும் இல்லாமல், அரிசி வடித்த தண்ணியில் பல நன்மைகள் உள்ளது. ஆம், சாதம் வடித்த கஞ்சியில் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை பருகும்போது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கிறது. உடலில் எலக்ட்ரோலைட்களை சமப்படுத்துகிறது. குறிப்பாக நோய் வாய்ப்பட்ட காலங்கள் மற்றும் வெயில் காலங்களில் உடல் இழக்கும் நீர்ச்சத்தை வழங்குகிறது. அரிசியில் இத்தனை நன்மைகள் உள்ளது என்று தட்டு முழுவதும் வைத்து சாப்பிட்டு விட கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியின் படி, குறைவான அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
Read more: மட்டன் பிரியரா நீங்கள்?? மட்டனின் இந்த பகுதியை சாப்பிட்டு, உடல் எடையை சுலபமாக குறைக்கலாம்..