முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரிப்பு, அலர்ஜி போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் கசகசா..! இவ்வளவு நன்மைகள் உள்ளதா.!

02:29 PM Feb 13, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக தமிழர்களின் சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல விதமான பொருட்களும் மருத்துவ தன்மை வாய்ந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக சமையலுக்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் கசகசாவில் பல்வேறு நோய்களை தீர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். கசகசா என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் என்பதையும் எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

Advertisement

கசகசா காய்ச்சல், அதிகமாக தாகம் எடுப்பது, உடலில் அரிப்பு ஏற்படுவது, மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, மூட்டு வலி, உடல் வலி, உடலில் வீக்கம், அலர்ஜி போன்ற பல்வேறு நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிப்பு சுவையும், வெப்ப தன்மையும் கொண்டுள்ள கசகசா விதைகளை சித்த மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மனம் சம்பந்தப்பட்ட நோய்களான மனச்சோர்வு, மனக்குழப்பம், பதட்டம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது. நரம்பு பிரச்சனைகளான நரம்பு வலி, தசைப்பிடிப்பு, தசை வலி போன்றவற்றையும் தீர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பாக கசகசாவை பாலில் ஊறவைத்து குடித்து வந்தால் சில நிமிடங்களிலேயே தூங்கி விடலாம்.

இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய கசகசாவை சில நாடுகளில் தடை செய்துள்ளனர். இதற்கு காரணமாக கூறப்படுவது கசகசா, போன்ற  போவிளையாட்டுகள் ்தக்காய் எனப்  கூறப்படும் மரத்தில் வளரும் காயில் உள்ளிருக்கும் விதைகள் தான். இந்த காயில் இருந்து ஒரு வகையான பால் வடியும். இந்த பால் போதைப் பொருளான அபினில் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதனை தடை செய்துள்ளனர். ஆனால் இந்தக் காயில் உள்ளிருக்கும் கசகசாவில் அந்த அளவிற்கு நச்சுத்தன்மை இல்லாததால் பல நாடுகளில் தொடர்ந்து உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tags :
healthyPoppy seedssleepகசகசா
Advertisement
Next Article