உடல் எடையை மேஜிக் போல் குறைக்கும் பிரண்டை.! எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக வேலி ஓரங்களில் அல்லது காடுகளில் தானாகவே வளர்ந்து நிற்கும் பிரண்டை செடியை பலரது வீடுகளிலும் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. இதில் அதிகமாக ஊட்டசத்துகள் உள்ளது என்று தெரிந்தாலும் இதன் சுவை பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் பிரண்டையை மருந்தாக சித்த மருத்துவத்தில் அன்றிலிருந்து இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரண்டையில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதையும், எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்?
1. பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.
2. இரத்த நாளங்களில் உள்ள கொழுப்புகள் கரைந்து, நச்சுகள் வெளியேறும். இதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
3. இரத்ததை சுத்தம் செய்து உடலில் பல்வேறு பாகங்களுக்கு செல்லும் இரத்ததை சீராக செல்ல உதவுகிறது.
4. உடலில் கால்சியத்தை அதிகப்படுத்தி எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
5. பற்கள், ஈறுகள் போன்றவற்றை பலப்படுத்துகிறது.
6. இரைப்பை அலர்ஜி, ஜீரணக் கோளாறு, பசியின்மை போன்றவற்றை சரி செய்து உடலை சீராக இயங்க உதவுகிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய பிரண்டையை தோல் நீக்கி நன்றாக சுத்தம் செய்துவிட்டு துவையல் செய்து சாப்பிடலாம் அல்லது பிரண்டையை அரைத்து சாறாகவும் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.