முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சொறி, சிரங்கு, படை முதல் புற்றுநோய் செல்களை அழிக்கும்..! சித்தர்களின் அபூர்வ மூலிகை..!

08:43 AM Feb 08, 2024 IST | 1newsnationuser5
Advertisement

நம் நாட்டில் சித்தர்கள் பல்வேறு வகையான மூலிகைகளை கண்டுபிடித்து ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் சித்தர்களின் அபூர்வ மூலிகையாக கருதப்பட்டு வருவது முடக்கத்தான் கீரை. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்க்கும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

1. சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு முடக்கத்தான் இலையை அரைத்து பூசி வந்தால் நோய் உடனே குணமாகும்.
2. முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
3. புற்று நோய் செல்களுக்கு எதிராக போராடி உடலில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
4. முடக்கத்தான் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர குடலிறக்கம் நோய் குணமாகும்.
5. காது வலி, காதுகளில் புண், காது குடைச்சல் உள்ளவர்கள் முடக்கத்தான் இலையை சாறு எடுத்து தூங்குவதற்கு முன்பாக இரண்டு சொட்டு காதுகளில் விட்டு வந்தால் காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
6. குழந்தை பெற்ற பெண்களுக்கு முடக்கத்தான் இலையை அரைத்து பச்சையாக குடிக்க கொடுத்தால் கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியாகி உடல் வலுப்பெறும்.
7. செரிமான பிரச்சனை வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை சரி செய்கிறது.
8. முடக்கு வாதத்தை சரி செய்யும் முடக்கத்தான் கீரை எலும்புகளுக்கு வலிமையை ஏற்படுத்தும் என்பதால் முதுகு வலி, மூட்டு வலி, கால் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முடக்கத்தான் கீரையை தினமும் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
9. முடக்கத்தான் கீரையை வெயிலில் காயவைத்து பொடியாக செய்து வைத்துக் கொண்டால் நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் இந்த பொடியை சேர்த்து சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும்.
10. நரம்பு தளர்ச்சியை நீக்கி நரம்பு வலிமை பெறவும், ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கவும் முடக்கத்தான் கீரை பெரும்பங்கு வகிக்கிறது.

Tags :
Benefitshealthyமுடக்கத்தான் கீரை
Advertisement
Next Article