For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னோர்களின் உணவான மாப்பிள்ளை சம்பா அரிசி.! ஆண்மையை அதிகரிக்குமா.!?

09:10 PM Feb 08, 2024 IST | 1newsnationuser5
முன்னோர்களின் உணவான மாப்பிள்ளை சம்பா அரிசி   ஆண்மையை அதிகரிக்குமா
Advertisement

"உணவே மருந்து"  என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் நம் முன்னோர்கள் பல வகையான ஊட்டச்சத்தை கொண்ட உணவுகளை தினமும் உண்டு நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்து வந்தனர். தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், துரித உணவுகளும் மட்டுமே அதிகம் விரும்பி உண்ணு வருகிறோம்.

Advertisement

நம் முன்னோர்கள் காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்வகைகள் இருந்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. அவற்றை உணவாக எடுத்துக் கொண்ட நம் முன்னோர்கள் தாம்பத்திய உறவில் சிறந்து விளங்கினார்கள். குறிப்பாக முன்னோர்களின் உணவான  மாப்பிள்ளை சம்பா அரிசியில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டசத்துகள் உள்ளன. குறிப்பாக ஆண்மை குறைவு பிரச்சினை உள்ளவர்கள் இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

தினமும் ஒரு வேளையாவது மாப்பிள்ளை சம்பா அரிசியை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வலுப்பெறும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆணுறுப்புக்கு சீரான இரத்த ஓட்டம் செல்ல உதவுகிறது. இதனால் ஆண்கள் தாம்பத்திய உறவில் சிறந்து விளங்க முடியும். மேலும் மலட்டுத்தன்மையை குறைத்து விந்துக்களில் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியில் ஆண்களின் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, இரும்பு சத்து, மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 1 போன்ற ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன. மாப்பிள்ளை சம்பா அரிசியை சோறாக மட்டுமல்லாமல் இட்லி, தோசை, பொங்கல் போன்றவையும் செய்து சாப்பிடலாம். மேலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுபவர்கள், புற்றுநோயாளிகள் போன்றவர்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியை உணவாக எடுத்துக்கொண்டு நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement