குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மணத்தக்காளி கீரை.! எப்படி பயன்படுத்தலாம்.!?
பொதுவாக கீரைகள் என்றாலே உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருபவையாகவே இருந்து வருகின்றன. அந்த வகையில் மணத்தக்காளி கீரை நோய்களை விரட்டவும் நோய் வந்த பின்பு அதன் பாதிப்பை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நம் முன்னோர்கள் அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்த முக்கிய கீரை மணத்தக்காளி தான்.
அந்த அளவிற்கு மணத்தக்காளி கீரைகள் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் முக்கிய மருத்துவ குணநலன்கள் இருந்து வந்தன. வாய்ப்புண், வயிற்றுப்புண், குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவது, வாயு பிரச்சனை போன்ற பல்வேறு நோய்களுக்கும் தீர்வாக இருக்கிறது. மணத்தக்காளி கீரையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
மேலும் மணத்தக்காளி கீரையை வாரத்திற்கு இரண்டு முறை உணவாக எடுத்துக் கொண்டு வந்தால் அல்சர், வயிற்றுப்புண் போன்ற பிரச்சினைகளை எளிதாக குணப்படுத்தலாம். காச நோய், மூச்சு விட சிரமப்படுதல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக மணத்தக்காளி கீரை இருந்து வருகிறது.
உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீரக செயல் இழப்பு போன்ற உயிரை பாதிக்கும் நோயிலிருந்தும் நம்மை பாதுகாத்து வருகிறது. தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய மருந்தாக இருந்து வரும் மணத்தக்காளி கீரை சரும வறட்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகள் போன்றவற்றிற்கும் சிறந்த நிவாரணியாக இருந்து வருகிறது. இவ்வாறு தலை முதல் கால் வரை பல்வேறு நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளதால் நம் முன்னோர்கள் இதை அடிக்கடி உணவாக பயன்படுத்தி வந்தனர்.