தாமரை விதையில் இவ்வளவு நன்மைகளா.! என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?
பொதுவாக மக்கானா எனப்படும் தாமரை விதைகள் முதன் முதலில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்தியாவிலும் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் டயட்டில் இருப்பவர்கள் மக்கானா விதையை அதிகம் சாப்பிட விரும்புகின்றனர். அந்த அளவிற்கு தாமரை விதையில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை குறித்து பார்க்கலாம்?
100 கிராம் தாமரை விதையில் 388 கிராம் கலோரிகளும், கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு சத்து, புரதம், நார்ச்சத்து போன்ற உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. குறைவான கார்போஹைட்ரேட்டும் நிறைந்த கலோரிகளும் கொண்டதால் தான் மக்கானா விதைகளை அதிகம் எடை குறைப்பவர்கள் உட்கொள்கிரார்கள்.
மேலும் மக்கானா என்ற தாமரை விதைகளை சாப்பிடும்போது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்துகிறது. இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. மேலும் இதிலிருக்கும் பிளவானாயுடுகள் உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றி வலியை போக்குகிறது.
வயதான காலத்தில் ஏற்படும் அல்சைமர் எனும் நினைவாற்றலை பாதிக்கும் நோயை மக்கானா முற்றிலுமாக கட்டுப்படுத்துகிறது. நரம்பு செல்கள் வீக்கத்தை குறைத்து சீராக செயல்பட வைப்பதோடு மூளையில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோக இதய நோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ உதவுகிறது.