மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் முருங்கைக்காய்..! என்னென்ன நோய்களை தீர்க்கும் தெரியுமா.!?
நாம் அன்றாடம் வீட்டில் சமைக்கும் காய்கறிகளில் பல வகையான சத்துக்கள் கிடைக்கின்றன. காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் நோய்களை விரட்டும். அவற்றில் ஒரு சில காய்கறிகளை அடிக்கடி உண்பதன் மூலம் உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகளிலிருந்தும் சத்து குறைபாடுகளில் இருந்தும் விடுபடலாம்.
குறிப்பாக நாம் அடிக்கடி உணவில் பயன்படுத்தும் முருங்கைக்காயில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, புரத சத்து, நார்ச்சத்து போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றன. இதனை உண்பதால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் நன்றாக செயல்பட உதவுகிறது. முருங்கைக்காய் என்னென்ன நோய்களுக்கு மருந்தாகும் என்பதை குறித்து பார்க்கலாம்
1. நீரிழிவு நோய் - ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் அதிகம் உள்ள முருங்கைக்காயை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நோயின் பாதிப்பை குறைக்கிறது.
2. இதய பாதிப்பு - தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பும் ஒரு வகையில் காரணம். முருங்கை காயில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு போன்ற இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
3. தோல் நோய்கள் - வைட்டமின் ஏ, போலிக் அமிலம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படும் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தோலில் ஏற்படும் புண்கள் போன்ற பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் சரும பொலிவை மேம்படுத்த முருங்கைக்காய் சேர்த்துக் கொள்வது கட்டாயம்.