முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்மை குறைவை போக்கும் டார்க் சாக்லேட்.! வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா.!?

09:20 PM Feb 04, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக சாக்லேட் என்றாலே உடல் நலத்திற்கு கேடு என்று சொல்வதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த டார்க் சாக்லேட் வகைகள் அதிகமாக சாப்பிடும் போது உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்களும் இதை சாப்பிட சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement

மனதளவிலும், உடலளவிலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக் கூடியது டார்க் சாக்லேட். டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோவில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், பிளவனாய்டுகள், பாலிபினாலிக் போன்ற உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் அமிலங்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் உடலில் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

1.  டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் நரம்பின் செயல்பாடுகளை அதிகரித்து மூளையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தோலில் ஏற்படும் நோய்களை தடுக்கிறது.
3. மன அழுத்தம், மனப்பதட்டம், குழப்பம் போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட டார்க் சாக்லேட்டை தினமும் சாப்பிட்டு வருவது பலன் அளிக்கும்.
4. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
5. குழந்தைகளுக்கு சாதாரண சாக்லேட் தருவதற்கு பதில் டார்க் சாக்லேட் தருவது அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
6. குறிப்பாக ஆண்களுக்கு விந்தணு பிரச்சனையை சரி செய்து தாம்பத்திய உறவில் நன்றாக செயல்படுவதற்கு இந்த டார்க் சாக்லேட் பெரிதும் உதவி புரிகிறது. ஆனால் இந்த டார்க் சாக்லேட்டிலும் ஒரு சில நோயை ஏற்படுத்தும் பண்புகள் இருப்பதால் இதனையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது என்பதையும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்" என்ற பழமொழியை மனதில் கொண்டு அளவோடு சாப்பிட வேண்டும்.

Tags :
BenefitsCocoaDark chocolate
Advertisement
Next Article