For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறுநீரகத்தை பாதுகாக்கும் சுரைக்காய்.. வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா.!?

09:20 AM Feb 08, 2024 IST | 1newsnationuser5
சிறுநீரகத்தை பாதுகாக்கும் சுரைக்காய்   வேறு என்னென்ன நன்மைகளை தரும் தெரியுமா
Advertisement

பொதுவாக காய்கறிகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவதன் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்கலாம்.

Advertisement

சுரைக்காயில் அதிகப்படியான நார்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனையை சரி செய்து செரிமான மண்டலம் எளிதாக செயல்பட உதவி புரிகிறது. இதனால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் உடலில் ஏற்படாது.

சுரைக்காயை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது. பசியை கட்டுப்படுத்தும் தன்மை இந்த காயில் இருப்பதால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலை நீர் இழப்பு ஏற்படாமல் தடுத்து சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. பல்வேறு நன்மைகளை உடைய சுரைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement