முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மன அழுத்தத்தை குறைத்து தூக்கமின்மை நோயை தீர்க்கும் சித்த மூலிகை..!

02:00 PM Feb 13, 2024 IST | 1newsnationuser5
Advertisement

பொதுவாக தூங்குவதற்கு முன்பு பால் குடிக்கும் பழக்கம் பலரது வீடுகளிலும் இருந்து வருகிறது. அப்படியிருக்க பாலில் இந்த அஸ்வகந்தா மூலிகையை பொடியாக செய்து கலந்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும். நீண்டகாலமாக மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் இந்த அஸ்வகந்தா மூலிகை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Advertisement

மேலும் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மிகவும் சோர்வடைந்து விடுகின்றனர். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதை முக்கிய காரணமாக கருதப்பட்டு வருகிறது. இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் அஸ்வகந்தா மூலிகையை அடிக்கடி எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அஸ்வகந்தா மூலிகையில் வித்தனோலைடுகள், சபோனின்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் போன்ற உயிரியல் செயல்திறன் கொண்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளது. இது தோலில் ஏற்படும் காயங்கள், தழும்புகள், அரிப்பு, புண்கள் போன்ற பலவற்றையும் சரி செய்து சருமத்தை பளபளப்பாகவும், ஈரப்பதமாகவும் வைத்துக் கொள்கிறது. ஆனால் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் தைராய்டு, நீரிழிவு நோய், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் இது போன்ற நோய்களுக்கு நீண்ட நாட்களாக மருந்துகள் எடுத்துக் கொண்டு வருபவர்கள் அஸ்வகந்தா மூலிகையை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

Tags :
BenefitsHerbal powderஅஸ்வகந்தா
Advertisement
Next Article