For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தினமும் 3 கப் டீ குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா.! மருத்துவர்களின் அறிவுரை என்ன.!?

07:15 AM Feb 15, 2024 IST | 1newsnationuser5
தினமும் 3 கப் டீ குடிப்பதனால் இவ்வளவு நன்மைகளா   மருத்துவர்களின் அறிவுரை என்ன
Advertisement

பொதுவாக தற்போது அனைவரது வீடுகளிலும் காபி மற்றும் டீ போன்ற பானங்களை காலை, மாலை என இரு வேளைகளிலும் குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இப்படி காபி, டீ என அடிக்கடி குடிப்பது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறி வந்தாலும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு டீ குடிப்பது உடலில் பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

Advertisement

குறிப்பாக காபியை விட டீ குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மையாகும். டீ பிடிக்காதவர்கள் என்பது இந்தியாவில் மிகவும் வெகு சிலர்தான். அந்த அளவிற்கு டீ என்பது இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த உணவு பொருளாக கருதப்பட்டு வருகிறது. தற்போது பலரும் மன அழுத்தத்தினால் பலவிதமான கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் ஒரு நாளைக்கு 3 கப் டீயை குடித்து வரும்போது மன அழுத்தம் குறைகிறது என்று ஒரு ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் அதிகரித்து முதுமையை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் வளர்வதை கட்டுப்படுத்துகிறது. இதனால் முதுமையிலும் இளமையான தோற்றத்துடன் இருந்து வரலாம். மேலும் ஒரு சிலருக்கு பாலில் செய்யப்படும் டீ நெஞ்செரிச்சல், வயிற்றில் அமிலம் அதிகமாகுதல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய பாதிப்புடையாவர்கள் பால் சேர்க்காமல் தேநீர் அருந்தி வரலாம். பால் டீ யை விட பிளாக் டீ உடலுக்கு மிகவும் நன்மையை ஏற்படுத்தும் என்று மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags :
Advertisement