இளநீருடன் தேன் கலந்து குடித்து வநதால் என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?
தற்போதுள்ள காலகட்டத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டினால் பல வகையான நோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றோம். இவ்வாறு நீர் சத்து குறைபாடு உடலில் ஏற்படாமல் இருக்க பலரும் குடிக்கும் ஒரு ஆரோக்கியமான பானகம் தான் இளநீர். இந்த இளநீரில் தேனை கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல்வேறு வகையான நோய்கள் குணமாகும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இளநீரில் தேன் கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.
1. தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் இளநீருடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும்போது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள செல்களை பாதுகாத்து முதுமையிலும் இளமை தோற்றத்துடன் இருக்க உதவி செய்கிறது.
2. இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் வயிற்றில் உள்ள அதிகப்படியான அமிலம் கட்டுப்படுத்தப்பட்டு செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை சரி செய்கிறது.
3. உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைத்து மலச்சிக்கல், மூல நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு போன்ற உடல் குறைபாடுகளை சரி செய்கிறது.
5. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் சீராக இரத்தம் செல்ல வழிவகை செய்கிறது.
6. மாரடைப்பு, இதய நோய், இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
7. வெறும் வயிற்றில் இந்த இளநீர் மற்றும் தேன் கலந்த பானகத்தை குடிப்பதன் மூலம் சிறுநீரகத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற்றி சிறுநீரக கல், சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கிறது. இவ்வாறு அதிகப்படியான வைட்டமின்களும், தாதுக்களும், புரதங்களும் நிறைந்த ஊட்டச்சத்தான இந்த பாநகத்தை குடிப்பதன் மூலம் உடலில் நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.