தினமும் இரவில் பால் குடிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்.. உங்களுக்கு தான் இந்த செய்தி.!?
நவீன காலகட்டத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளும், மருந்துகளும் எடுத்து வந்தாலும் பலரும் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேலும் இரவு நேரத்தில் தூங்காமல் கண் விழித்து இருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் ஒரு சில பயிற்சிகள், உணவு பழக்கவழக்கங்களின் மூலம் தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்யலாம். அவற்றில் ஒன்றுதான் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்பாக பால் அருந்துவது. இதனால் என்னென்ன நன்மைகள் உடலில் ஏற்படும் என்பதை குறித்து பார்க்கலாம்.?
இரவு நேரத்தில் உணவு உண்ட பின் பால் அருந்துவதால் மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வர வைக்கிறது. பாலில் உள்ள மெலட்டோனின் ட்ரிப்டோபன் எனும் வேதிப்பொருள் மூளையில் தூங்குவதற்கான சிக்னலை தந்து தூங்குவதற்கு உதவி செய்கிறது.
தினசரி இரவு உணவு உண்பதற்கு பின்பு பால் அருந்துவது உடல் எடையை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வந்தாலும் அதில் உண்மை இல்லை. வெதுவெதுப்பான பாலை அருந்திய பின் தூங்குவதால் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதோடு, அடுத்த நாள் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. இவ்வாறு பால் குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது என்பதால் இதை மருத்துவர்களும் பின்பற்றக் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.