70 வயதிலும் எழுந்து ஓட வைக்கும் அற்புத தேநீர்.! வேறு என்னென்ன நன்மைகளை தரும்.!?
பொதுவாக தினமும் காலையில் டீ, காபி போன்றவற்றை குடிப்பது பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வாறு ஒரு நாளை ஆரம்பிக்கும் போது டீ அல்லது காபி குடிப்பது அன்றைய நாளுக்கு தேவையான சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தருகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான டீ, காபி போன்றவற்றை குடிப்பது உடலுக்கு நல்லதல்ல என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனவே உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் வைத்து தேநீர் தயாரித்து குடிப்பதன் மூலம் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். நெல்லிக்காயை நன்றாக துருவி தண்ணீரில் கொதிக்க வைத்து, கொதித்ததும் வடிகட்டி அதில் தேன் கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் 70 வயதிலும் இளமையான தோற்றத்தை பெறலாம். வயதான காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் மிகவும் குறையும். இந்த நேரத்தில் நெல்லிக்காய் தேநீர் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நீண்ட ஆயுளுடன் வாழலாம்.
மேலும் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது. இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவற்றை முற்றிலுமாக குணமடைய செய்கிறது.
நீரிழிவு நோய் பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் தேநீர் தினமும் காலையில் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைத்து எடையை குறைக்கவும், இதய நோயிலிருந்து பாதுகாக்கவும் மிகப் பெரும் உதவியாக இருந்து வருகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய நெல்லிக்காய் தேநீர் தினமும் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.