மாரடைப்பு, ஆஸ்துமா, மூட்டுவலி போன்றவை ஏற்படாமல் தடுக்கும் மல்லி விதை..! எப்படி பயன்படுத்துவது..!
பொதுவாக நம் தமிழ்நாட்டில் சமையல் அறையில் இருக்கும் பல பொருட்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாகவே இருக்கின்றன. அந்த வகையில் சிறப்பு வாய்ந்ததாகவும், மருத்துவ குணங்கள் மிக்கதாகவும் இருந்து வரும் மல்லிவிதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் உடலில் பல நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
1. மல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் குடிக்கும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து இன்சுலின் அதிகமாக தூண்டப்படுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வருகிறது.
2. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி செய்யவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தை சீராக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கவும் மல்லிவிதை ஊறவைத்த தண்ணீர் பெரிதும் உதவி புரிகிறது.
3. ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை மல்லி விதைகளை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் சரி செய்யலாம்.
4. மல்லி விதையில் லினோலிக் ஆசிட், சினோல் ஆசிட் போன்ற அமிலங்கள் நிறைந்துள்ளதால் இதை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கிறது.
5. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
6. மெட்டபாலிசத்தை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
7. இவ்வாறு பல்வேறு நன்மைகளும் மல்லிவிதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும்.