கொத்தமல்லி இலைகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்து பாருங்கள்..
அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் தான் கொத்தமல்லி. இதை நாம் வெறும் சுவைக்காக மட்டும் தான் என்று நினைத்து விடுகிறோம். ஆனால், கொத்தமல்லி, சிறுநீரக நச்சுக்களை நீக்க, கொல்ஸ்ட்ராலை எரிக்க, உடல் பருமை குறைக்க என ஏராளமான நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் இது எளிதில் கெட்டு விடும். கொத்தமல்லி இலைகளை ப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்வது சற்று கடினம் தான். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மூலம், நீங்கள் கொத்தமல்லியை நீண்ட காலத்திற்கு பிரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.
அதற்க்கு முதலில், கொத்தமல்லியை காற்று புகாத டப்பாவில், டிஷ்யூ பேப்பரை போட்டு, பின் அதன் மீது கொத்துமல்லையினை வைத்து மூடி ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதனால் 10 நாட்களுக்கு கொத்தமல்லி பிரெஷ்ஷாக இருக்கும்.
கொத்தமல்லியை மஸ்லின் துணியால் சுத்தி ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதனால் குறைந்தது ஒரு வாரமாவது பிரெஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லி தண்டினை தண்ணீரில் வைத்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும். கொத்தமல்லி வேர்களை அரை கிளாஸ் தண்ணீரில் வைத்து, பின்னர் ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் இந்த தண்ணீரை மாற்ற வேண்டும்.
கொத்தமல்லியை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி, அதை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைக்கவும். இப்படி செய்வதால் கொத்தமல்லி நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக இருக்கும்.
கொத்தமல்லியை தண்ணீரில் நன்கு கழுவி, பின்னர் அதன் இலைகளின் தண்டுகளை வெட்டி, இலைகளை மஞ்சள் கலந்த நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் அதை உலர வைக்கவும். இதுவும் கொத்தமல்லியை பிரெஷ்ஷாகவைக்க உதவும்.
Read more: “அவர் பயன்படுத்திய ஆணுறையை என்கிட்ட கொடுத்து…” பிரபல நடிகை அளித்த பரபரப்பு பேட்டி..